நாம் இழந்து வரும் பண்பாடுகளில் மிக முக்கியமானது கூட்டுக்குடும்பமும் ஒன்று.கூட்டுக்குடும்பம் என்பது அப்பா,அம்மா,சித்தப்பா,சித்தி, பெரியப்பா,பெரியம்மா,தாத்தா,பாட்டி,பேரக்குழந்தைகள் என ஒன்றாக கூடி தன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டார்கள்
என்றைக்கு நகரங்களுக்கு நகர்ந்தோமோ,என்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்ததோ,என்றைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்ததோ அன்றைக்கு குடும்பங்களும் உடைய ஆரம்பித்தது.
கூட்டுக்குடும்பம் என்பது மூன்று நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஒற்றுமையாக இருந்த காலம் போய் அம்மா,அப்பா சேர்ந்து இருந்தாலே அது கூட்டுக்குடும்பமே என்ற நிலையாகிவிட்டது.பெரிய குடும்பமாக இருந்தாலும் குடும்ப வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பங்கமும் வந்திடாது.அந்த அளவிற்கு விட்டுக்கொடுத்தலும் புரிதலும் இருந்தது.
இன்று என் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றால் அங்கு சண்டை வருவத்தில்லை என்று அர்த்தமில்லை,சண்டை வந்தாலும் எப்படி சமாளித்து ஒற்றுமையாக இருப்பது என்று என் முன்னோர்கள் கூறுவதை பின்பற்றுவதால் தான்.
இப்போது உறவுகள் கூட உள்ளத்தளவில் இல்லாமல் உதட்டளவுக்கு மாறிவிட்டது. உணவு, உடை என எத்தனையோ விஷயங்களில் நாம் மாறி விட்டோம். இது மட்டுமின்றி இந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையைத் துறப்பதும்..மறப்பதும் நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லதல்ல.ஆனால் நம் உறவுகளை உதட்டளவில் இருந்து உள்ளத்தளவில் எடுத்துச் செல்ல வேண்டும். நாம் மாற்றும் ஒவ்வொன்றும் நாட்டையே மாற்றா விட்டாலும் நாம் சுற்றி இருப்பவர்களை கண்டிப்பாக மாற்றி விடும். சாதாரண சிரமங்களை நினைத்து, சாதிக்க வேண்டிய வாழ்க்கையை துறப்பது படைப்பின் பரிணாமத்துக்கே அர்த்தமற்றதாக ஆகிவிடும். முடிந்தவரை கூடி வாழ்வோம்.. கோடி நன்மைகள் பெற்று இன்பமாக வாழ்வோம்..!